×

காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தை புரிந்து கொள்ள மோடியும், அமித் ஷாவும் பல பிறவிகள் வேண்டும்.. பவன் கேரா
 

 

காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தை புரிந்து கொள்ள மோடியும், அமித் ஷாவும் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என காங்கிரஸின் பவன் கேரா தெரிவித்தார்.

தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால  தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: காந்தி குடும்பம் என்றால் என்ன, காங்கிரஸ் என்றால் என்ன? என்பதை பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்கள் (நரேந்திர மோடி, அமித் ஷா) புரிந்து கொள்ள பல முறை மீண்டும் பிறக்க வேண்டும்.

சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் மோடிக்கு தூக்கமில்லாத இரவுகளை அளிக்கும் பொருத்தமான கேள்விகளை எழுப்புவதால், அவர்கள் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடிக்கு ராஜதர்மத்தை நினைவூட்டும் வகையில், மத்திய புலனாய்வு அமைப்புகள் காந்தியை வரவழைக்கின்றன. மத்திய புலனாய்வு அமைப்புகளின் சம்மன்கள் மூலம் ஏற்படும் அழுத்தங்களுக்கு அதன் தலைவர்கள் அடிபணிய மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், சோனியா காந்தி மற்ற எந்த இந்திய பெண்ணையும் விட குறைவானவர் அல்ல. அவர் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், அவர்கள் ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்பதை செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அமலாக்கத்துறை விளக்கம் வேண்டும் என தெரிவித்தார்.