×

ஆளுநரை கொலை செய்யக்கூட தயங்காது திமுக... அதிர்ச்சி பேச்சுக்கு முதல்வருக்கு பாஜக விடும் எச்சரிக்கை

 

"பீகாரிலிருந்து வந்தவன் தான் ரயிலேறி வந்தவன் போல இங்க இருக்கிற கவர்னர். எச்ச இலை எடுக்கிற மாதிரி வேலை தான் கவர்னர் வேலை. இதே  ஜெயலலிதா இருந்திருந்தால், அந்த ஆள் உதை வாங்காம போயிருக்க மாட்டான். கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்ததால், வூட்டுக்கு போயிருக்க முடியுமா? யேல் பல்கலைக்கழகத்திற்கு போய் படித்து பட்டம்  வேண்டுமா? எது கிடைக்குதோ அதை வைத்து தூக்கி அடித்தால் அடிச்சிட்டு  போய்க்கிட்டே இருந்திருப்பான். முதலமைச்சர் நினைத்திருந்தால், துரைமுருகனை எந்திருக்க சொல்லி கவர்னரை அவையிலிருந்து வார்டன்களை வைத்து வெளியேற்றியிருக்கலாம். சபாநாயகர் தான் அந்த அவையின் கஸ்ட்டோடியன். அதுக்குள்ள கொலையே நடந்தால் கூட யாரும் கேஸ் போட முடியாது. அதான் ப்ரொவிஷன்".  வட சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் இரு நாட்களுக்கு முன்பு இப்படி பேசியிருப்பது தி மு க வின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி.

தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மேலே  இருப்பதை தனது  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் மேலும் இதுகுறித்து,   ’’ஒரு கேடுகெட்ட, தரக்குறைவான, தரம் தாழ்ந்த இந்த நபர், பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரை தொடர்ந்து சாக்கடையில் ஊறியது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வந்த நிலையில்,  இப்போது ஒரு ரௌடியை போல் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரிடம் சொல்லி விட்டு தான் அந்த கூட்டத்தில் பேசுவதாக சொன்ன போது பார்த்து பேசவும் என்று அவர் கூறியதாக சொல்கிறார். 

எது கிடைக்குதோ அதை வைத்து அடித்து போய்கிட்டே இருப்போம் என்றும், கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் கவர்னர் வூட்டுக்கு போயிருக்க முடியுமா சட்ட சபைக்குள் கொலையே நடந்தாலும் கேஸ் போடா முடியாது என்கிறார் திமுகவின் அமைப்பு செயலாளர். அதாவது ஆளுநரை கொலை செய்யக்கூட தயங்காது திமுக என்ற பொருள்பட  பேசியிருப்பது திமுகவின் அதிகார திமிரை தெளிவாக உணர்த்துகிறது.

 ஜனநாயக நாட்டில் ரௌடித்தனம் மூலம் ஆட்சி செய்ய தயங்க மாட்டோம் என்று உயர் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவர் சொன்னதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்த்து கொண்டு, கேட்டு கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இந்த மாநிலத்தின் முதல் நபரை, ஆளுநரை  அடிப்போம், உதைப்போம், கொலை செய்வோம் என்றெல்லாம் பேசியிருப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பது திமுகதான் என்பதை உறுதி செய்கிறது.  தொடர்ந்து தரக்குறைவாக பேசி வந்த ஆர்.எஸ்.பாரதியை அனைவருக்குமான முதல்வர் என்று மார்தட்டி கொள்ளும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனக்கு சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து, உடனடியாக இந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து  சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும். காவல் நிலையத்தில் 'ரௌடி லிஸ்டில்' இடம் பெற வேண்டிய இந்த நபர், ஒரு ஆறு மாதங்களாவது சிறையில் இருந்தால் தான் திருந்துவார். இல்லையேல், திமுகவிற்கு 'ஆபத்து தான்'. வெட்கக்கேடு தான்!’’ என்கிறார்.