சி.பி.ஐ. அதிகாரி தற்கொலை.. பிரதமர் மோடியிடம் 3 கேள்விகளை எழுப்பிய மணிஷ் சிசோடியா
சி.பி.ஐ. அதிகாரி தற்கொலையை குறிப்பிட்டு, பிரதமர் மோடியிடம் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சி.பி.ஐ.யின் துணை சட்ட ஆலோசகர் ஜிதேந்திர குமார் (வயது 48) கடந்த வியாழக்கிழமையன்று தனது தெற்கு டெல்லி இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட சி.பி.ஐ.யின் துணை சட்ட அதிகாரி மரணத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசுதான் காரணம் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். மணிஷ் சிசோடியா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் என்னை பொய் வழக்கில் சிக்க வைக்குமாறு சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சி.பி.. அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த மன அழுத்தத்தை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார். நீங்கள் விரும்பினால் என்னை கைது செய்யுங்கள், ஆனால் உங்கள் அதிகாரிகளின் குடும்பங்களை அழிக்காதீர்கள். பிரமர் மோடியிடம் 3 கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
1. அதிகாரிகள் ஏன் இவ்வளவு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறாாகள் என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்?. 2.ஆபரேஷன் தாமரையை எல்லா இடங்களிலும் நடத்தும் அளவுக்கு மத்திய அரசின் வேலை குறைக்கப்பட்டுள்ளதா? 3.ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்க நீங்கள் எத்தனை தியாகங்களை செய்திருக்கிறீர்கள்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.