×

மகா விகாஸ் அகாடி அரசு தாவூத்திடம் சரணடைந்தது, நவாப் மாலிக் ராஜினாமா செய்ய வேண்டும்.. பா.ஜ.க. வலியுறுத்தல்

 

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆளும் மகா விகாஸ் அகாடி அரசு தாவூத்திடம் சரணடைந்தது, அமைச்சர் நவாப் மாலிக் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தினார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது சகோதரி ஹசீனா மற்றும் தாவூத்தின் கூட்டாகளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தததில் மகாராஷ்டிரா சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை அண்மையில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து நவாப் மாலிக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் நவாப் மாலிக்கை ராஜினாமா செய்யக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிறையில் இருக்கும் அமைச்சர் நவாப் மாலிக்கை ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவரது (நவாப் மாலிக்) ராஜினாமாவை எடுக்க அரசு ஏன் விரும்பவில்லை? இது ஒரு தாவூத் அர்பணிக்கப்பட்டது, தாவூத் புகலிட அரசாங்கம். 

தாவூத்துடன் உறவு வைத்துள்ளவர்களை காப்பாற்ற இந்த அரசு ஒன்று சேர்ந்துள்ளது. அதனால்தான் அவரது ராஜினாமா உடனடியாக எடுக்கக்கோரி நாங்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளோம். மகாராஷ்டிராவில் முதன்முறையாக, ஒரு அமைச்சர் (நவாப் மாலிக்) சிறைக்கு பின்னால் இருக்கிறார். ஆனால் அவரது ராஜினாமா எடுக்கப்படவில்லை. இது எதிர்பாராதது. ஒரு சிறிய விஷயத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. தாவூத் இப்ராஹிமின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.