×

ஒரு காலத்தில் ஒரு பொல்லாத அரசன் இருந்தான்.. உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக தாக்கிய அம்ருதா பட்னாவிஸ்
 

 

ஒரு காலத்தில் ஒரு பொல்லாத அரசன் இருந்தான் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மறைமுகமாக தாக்கியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரும், அம்மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு சிவ சேனா எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயார் என்றால் சிவ சேனாவில் பிளவு ஏற்படாது என்று உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அம்ருதா பட்னாவிஸ் டிவிட்டரில், ஒரு காலத்தில் ஒரு பொல்லாத அரசன் இருந்தான் என உத்தவ் தாக்கரே மறைமுகமாக குறிப்பிட்டு பதிவு செய்து இருந்தார். இருப்பினும் பின்னர் அந்த டிவிட்டை அம்ருதா பட்னாவிஸ் நீக்கி விட்டார்.

மத்திய அமைச்சர் ராராயண் ரானே டிவிட்டரில், சிவ சேனாவின் மூத்த தலைவரும், சாம்னா பத்திரிகையின் ஆசிரியருமான சஞ்சய் ரவுத் சிவ சேனாவை ஆட்சியில் இருந்து அகற்றி, சிவ சேனாவை முடிவுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும் என பதிவு செய்து உள்ளார்.