×

டெல்லி மாநகராட்சிகளில் பா.ஜ.க.வின் காலம் இப்போது முடிந்து விட்டது.. ஆம் ஆத்மி 
 

 

டெல்லி மாநகராட்சிகளில் பா.ஜ.க.வின் காலம் இப்போது முடிந்து விட்டது என ஆம் ஆத்மியின் துர்கேஷ் பதக் தெரிவித்தார்.

டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி மற்றும் கிழக்கு மாநகராட்சிகளுக்கு இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி மாநகராட்சிகளில் துப்புரவு பணியாளர்களை முறைப்படுத்துதல் தொடங்கி விட்டது டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்து  இருந்தார். ஆனால் இதனை ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்துள்ளது.

ஆம் ஆத்மியின் துர்கேஷ் பதக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேற்று (நேற்று முன்தினம்) பா.ஜ.க. ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. எம்.சி.டி. தேர்தலில் உடனடி தோல்வியை பற்றி குப்தா பதற்றமடைந்தார். அவர்களின் வரவிருக்கும் தோல்வி பற்றி அவர்களுக்கே தெரியும். பல துப்புரவு தொழிலாளர்கள் என்னை அழைத்து அவர்களின் பொய்களை பற்றி புகார் செய்தனர். பா.ஜ.க. இந்த வாக்குறுதிகளை பலமுறை அளித்தும் நிறைவேற்றவில்லை. 

சுமார் 30 ஆண்டுகளாக இந்த தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். எம்.சி.டி.யில் தற்போது பா.ஜ.க.வின் காலம் முடிந்து விட்டது. துப்புரவு பணியாளர்கள் பழிவாங்க வேண்டும் என்றும், பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றும் நான் கூற விரும்புகிறேன். டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி தங்கள் பணிகளை குறிப்பிடத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.