×

ஓபிஎஸ் மெயின் சுவிட்ச்சில் கை வைக்கும் எடப்பாடி

 

அடிமட்ட தொண்டர்களும் பெரும் பதவிகளை வகிக்கலாம் என்பதுதான் அதிமுகவின் தாரக மந்திரம்.  எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இதைத்தான் பின்பற்றி வந்தார்கள். அதன்படிதான் மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கட்சியில் கீழ் நிலையில் உள்ள நிர்வாகிகளுக்கு அந்த இரண்டு சீட் தர வேண்டும் என ஓபிஎஸ் சொல்ல,  ஆனால் எடப்பாடி தனது தீவிர ஆதரவாளர்களான சிவி சண்முகம்,  ஜெயக்குமார் இரண்டு பேருக்கும் அந்த சீட்டு ஒதுக்க,  அப்படி என்றால் அதற்கு சம்மதம் தெரிவித்து தான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஓபிஎஸ் கறார் காட்ட எடப்பாடிக்கு டென்ஷன்.

 எடப்பாடி தரப்பு எத்தனையோ பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்,  சரி கட்சியில் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறோம்.  இரட்டை தலைமையில் இயங்குகிறது.  அதனால் உங்களுக்கு ஒரு சீட் எனக்கு ஒரு சீட் அப்படியாவது விட்டு வாருங்கள் என்று ஓபிஎஸ் சொல்ல, வேறு வழியில்லாமல் எடப்பாடி ஒரு சீட் தனக்கு எடுத்துக்கொண்டு அதை  சண்முகத்திற்கு வழங்கிவிட்டார்.   ஓபிஎஸ் இடம் இருந்த அந்த ஒரு சீட்டையும் ஜெயக்குமாருக்கு வழங்கச் சொல்லி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த,   எம்ஜிஆர்- ஜெயலலிதா பாணியில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர் அதுவும் கீழ்நிலையில் உள்ள ஒரு நிர்வாகிக்கு  தர்மருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்.  இதனால் ஜெயக்குமார் கொதித்தெழுந்து எடப்பாடி இடம் புகார் வாசிக்க,  சிவி சண்முகம் இதில் சீறிப்பாய,  இரட்டைத்தலைமை இருப்பதால்தான் இந்த நிலைமை.

 ஒற்றை தலைமைக்கு கொண்டு வந்து விட்டால் என்ன என்று சொல்ல,  எடப்பாடியும் அது தான் சரி என்று  தலையசைத்ததால் தான் அதிமுகவின் இந்த ஆட்டத்திற்கு காரணம்.  

 ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு எப்படி சிவி சண்முகம் வலதுகரமாக இருக்கிறாரோ அதேபோல் ஓபிஎஸ்க்கு வைத்திலிங்கம் வலதுகரமாக இருந்து வருகிறார்.   எடப்பாடி பக்கம் பெரும்பான்மையான ஆதரவு இருந்தாலும் ஓபிஎஸ்-க்கு வலதுகரமாக இருப்பவரை தங்கள் பக்கத்தில் இழுத்து விட்டால் இன்னும் ஒற்றை தலைமை விவகாரம் தனக்கு சாதகமாக ஆகிவிடும் என்று நினைக்கிறாராம் எடப்பாடி.   இதனால்தான் வைத்தியத்தை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி திறப்பு தூது போகிறதாம்.    எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆனால் உங்களுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று வைத்திலிங்கத்திடம் பேசி வருகிறதாம்  அந்த தூதுக்குழு.   எடப்பாடி விரித்த வலையில் வைத்திலிங்கம் விழப்போகிறாரா என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது ஓபிஎஸ் வட்டாரத்தில்.