×

எடப்பாடிக்கு வளர்மதி கேக் ஊட்ட,  ஓபிஎஸ்க்கு கோகுல இந்திரா ஊட்ட.. எம்.ஜி.ஆர். மாளிகை கொண்டாட்டம்
 

 

வளர்மதிக்கு எடப்பாடி பழனிச்சாமி கேக் ஊட்டவும்,  கோகுல இந்திராவுக்கு ஓ. பன்னீர்செல்வம் ஊட்டவும், பதிலுக்கு அவர்கள் இவர்களுக்கு கேக் ஊட்ட ஒரே  கொண்டாட்டமாக இருந்தது அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை.

 மகளே தினத்தை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.   அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பங்கேற்றனர்.  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி,  கோகுல இந்திரா,  வளர்மதி மற்றும் நிர்வாகிகள் ஏராளமான கட்சி தொண்டர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 சசிகலா அதிமுகவில் மீண்டும் வருகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில்,  ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு எதிராகவும் இருக்கிறார் என்றுபேசப்பட்டு வரும் நிலையில்,   இது தொடர்பாக இன்று இருவரும் சேர்ந்து பேசி முடிவு எடுக்கிறார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்,  அதற்கு நேர்மாறாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

 ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவருமே கேக் வெட்டி கொண்டாடினார்கள்.   கேக் வெட்டிய பின்னர் எடப்பாடிபழனிசாமி வளர்மதிக்கு ஊட்டினார்.  ஓ. பன்னீர்செல்வம் பக்கத்திலிருந்த கோகிலஇந்திராவுக்கு ஊட்டினார்.  இதன்பின்னர் கோகுல இந்திராவும் வளர்மதியும் கேக் எடுத்து பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் மாறி மாறி ஊட்டி விட்டனர்.  அப்போது மற்ற நிர்வாகிகள் சிரித்து ஆரவாரித்தனர்.

 ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.    இதனால் எம்ஜிஆர் மாளிகை கொண்டாட்டத்தில்  மிதந்தது.