×

கட்சியில் தனக்குதான் அதிக ஆதரவு, பெரும்பான்மை உள்ளதாக அமித்ஷாவிடம் கூறிய எடப்பாடி பழனிசாமி

 

அதிமுகவில் உட்கட்சி பூசல் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது மட்டுமில்லாமல் கட்சியை யார் கைபற்றுவத யார் என்ற சண்டை ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இடையே நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீஷாவை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் ஓ.பி.எஸ். பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை யார் தலைமை ஏற்பது என்ற போட்டி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்துக் கொண்டு இருக்கும் நிலையில் நேற்று இரவு டெல்லி சென்றார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி. டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காலை 11 மணிக்கு சந்தித்து. அமீத்ஷாவின் அலுவலகத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற சந்திப்பில் போது தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே.பழனிச்சாமி,
உள்துறை அமைச்சருடன் நடந்த சந்திப்பு மரியாதை நியமிதமானதாக இருந்தாலும் கூட தமிழகத்தின் முக்கிய திட்டமான கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், காவிரில் கழிவுநீரை சுத்திகரிக்கும் "நடந்தாய் வாழி காவிரி" ஆகிய திட்டங்களை ஒன்றிய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சர் கூறியதாக எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முழுவதும் ஓ.பி.எஸ். சுற்றிப்பயணம் மேற்வது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஈ.பி.எஸ் தானும் தமிழ்நாடு முழுக்க சுற்றி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் அதற்கு பதிலளிக்க மறித்து சென்று விட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின் போது தனக்குத் தான் கட்சியில் அதிக ஆதரவு மற்றும் பெரும்பான்மை உள்ளது என்றும் எனவே தனது தலைமையிலான அணி தான் உண்மையான அ.தி.மு.க என்றும் எடுத்து விளக்கி கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அமித்ஷா வை சந்தித்த போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி ஆகியோர் உடனிருந்தார்கள்.