எடப்பாடி எழுதும் பதில் கடிதம்! வழக்கறிஞர் சொல்லும் பரபரப்பு தகவல்
அதிமுக சட்ட விதிகளின் படி எடப்பாடி பழனிச்சாமியும்அவரது ஆதரவாளர்களும் செயல்படவில்லையென்று பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் அளித்திருக்கும் நிலையில் அதிமுகவின் சட்ட விதிகளின் படியே நாங்கள் நடந்து கொண்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க பதில் கடிதம் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக சட்ட நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், ’’அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வத்தின் ஒப்புதலின்றி நடைபெறும் நிகழ்ச்சிகள் எதுவும் செல்லாது. இந்த அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தில் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார் பன்னீர்செல்வம்’’ என்கிறார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கறிஞர், ’’அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே கட்சியின் தலைமையை தீர்மானிக்கும். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு இருக்கிறது . இதனை தேர்தல் ஆணையத்தில் நாங்கள் நிரூபிப்போம் என்கிறார் . இதனால் இன்னும் சில இடங்களில் ஓபிஎஸ் கடிதத்திற்கு பதில் கடிதம் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வத்திற்கு போதுமான ஆதரவு இல்லை பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என்று அனைவருக்குமே எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் உள்ளனர் என்று சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு பதில் கடிதம் தயாராகிறது.
எடப்பாடி எழுதப்போகும் பதில் கடிதத்திற்கு எப்படி பதில் கொடுப்பது என்று ஓபிஎஸ் தரப்பும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது.