×

“சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவருக்கும் அதிமுகவில் இடமில்லை”
 

 

சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய மூவருக்கும் அதிமுகவில் இடமில்லை என்று பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தெரிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மணலூர்பேட்டையில்  மாபெரும் பொதுக்கூட்டம் முன்னாள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகனும் தென் சென்னை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயபார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முன்னதாக மாவட்ட செயலாளர் குமரகுரு மணலூர்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த பொதுக் கூட்டத்திற்கு ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட 140 கிராமத்திலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுகவினர் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் உள்பட பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்தில் எடுத்துரைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளரும் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு, “தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தின் முழுமையாக உழைத்தவர் கலைஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை உருவாக்கி இந்திய அதிகாத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா, அவர் காட்டிய வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று அவர் மறைவிற்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிறப்பான முறையில் கழகத்தை காப்பாற்றி வழிநடத்தி தற்போது மூன்றாம் தலைமுறையாக எடப்பாடி அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு தகுதியானவர். எடப்பாடி பழனிச்சாமி ஒருவர் மட்டுமே, ஓபிஎஸ் அதிமுக கட்சி அலுவலகத்தை குண்டர்கள் வைத்து உடைத்து அதில் இருக்கும் முக்கிய கோப்புகளை திருடிச் சென்றுள்ளார். அவர் உண்மையான அதிமுகவா எந்த உண்மையான அதிமுகவும் இப்படி பண்ண மாட்டார்கள் எக்காலத்திலும் ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை. பொதுக்குழு குழுவில் 2500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி எடப்பாடி இடைக்கால பொது செயலாளராக அறிவித்தனர், அதுமட்டுமில்லாமல் அதிமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமையே விரும்புகிறார்கள் அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒற்றை தலைமையே தான் விரும்புகிறார்கள். ஆகவே எடப்பாடி தலைமையிலான ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய மூவருக்கும் அதிமுகவில் இடமில்லை” எனக் கூறினார்.