×

பெண் எம்.பி.யா? மாண்புமிகு உறுப்பினரா? ஸ்மிருதி ராணியால் சலசலப்பு

 

மாண்புமிகு உறுப்பினரா? இல்லை பெண் எம்பி.யா? என்பது பற்றிய விவாதத்தினால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.  அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சினால்தான் இந்த சலசலப்பு எழுந்தது.

 மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசும்போது,  ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் எம்பி கீதா விஸ்வநாத் வங்காவை,  ’’பெண் எம்.பி. ’’என்று அழைத்தார்.   உடனே காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி,  திரிணாமுல் காங்கிரஸின் சவுகதா ராய்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

’’மாண்புமிகு உறுப்பினர்’’ என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி அழைத்திருக்க வேண்டும் என  அவர்கள் தெரிவித்தனர்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி,   பெண் எம்பி-ஐ பெண் என்று குறிப்பிடுவதில் எந்தவித மரியாதை குறையும் இல்லை என்றார்.

 இந்த விவாதத்தினால் மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது.