×

சோனியா அழைப்பை நிராகரித்த குலாம் நபி ஆசாத்

 

காங்கிரஸின்  இரண்டாம் நிலை தலைவராக பணியாற்ற வேண்டும் என்று சோனியாகாந்தி கேட்டுக்கொண்ட பின்னரும் முடியாது என்று சொல்லி இருக்கிறார் குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.  ஜம்மு காஷ்மீரில் பிறந்த இவர்  காங்கிரஸ் கட்சியில் 9 முறை பொதுச்செயலாளராகவும், 18 ஆண்டுகள் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.  சோனியாவால் அமைக்கப்பட்ட கட்சியின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராகவும் உள்ளார் குலாம் நபி ஆசாத்.  முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலும் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்தார்.  

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் குழுவில் இருக்கிறார் குலாம் நபி ஆசாத்.  அண்மையில் உதய்ப்பூரில் நடந்த சிந்தனை மாநாட்டிலும் கூட குலாம் நபி ஆசாத் அளவாகவே பேசியிருக்கிறார்.  இவரிடம் கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக இருந்து பணியாற்ற வாருங்கள் என்று சோனியா அழைத்திருகிறார்.  அதற்கு குலாம்நபி ஆசாத்,  கட்சியை வழிநடத்தும் இளைஞர்களின் சிந்தனைக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையே தலைமுறை இடைவெளி வந்துவிட்டது. அதனால் நான் ஏற்க விரும்பவில்லை என்று சொல்லி மறுத்திருக்கிறார்.