×

 ‘அமித்ஷாவே திரும்பி போ’ - தேசிய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #Go_Back_Amitshah 

 

 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார் .  புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக அமைச்சர் அமித்ஷா வருகிறார்.

 இதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து புதுச்சேரி செல்ல முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பின்னர் அந்த பயண திட்ட மாற்றப்பட்டிருக்கிறது.  அதன்படி இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் அமித்ஷா இரவு 7.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தடைகிறார் .

விமான நிலையத்தில் வழக்கம்போல் நடைபெறும் வரவேற்பு ஏதும் இல்லை.  அங்கிருந்து உடனடியாக இரவு 7. 35 மணி அளவில் காரில் புறப்பட்டு ஆவடியில் இருக்கும் சிஆர்பிஎஃப் முகாம் அலுவலகத்திற்கு 8.15 அளவுக்கு சென்றடைகிறார்.  அங்கியிருக்கும் விருந்தினர் மாளிகையில் இன்று இரவு அவர் தங்குகிறார்.


 நாளை காலை எட்டு முப்பது மணி அளவில் ஆவடியில் உள்ள விமானப்படை தளத்துக்கு செல்கிறார்.  8. 40 மணிக்கு ஆவடியில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்கிறார்.   காலை ஒன்பது முப்பது மணி அளவில் புதுச்சேரி செல்லும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மாலை ஐந்து முப்பது மணி அளவில் தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு  6 .15 மணி அளவில் சென்னை பழைய பழைய விமான நிலையத்திற்கு வரும் அமித்ஷா  அங்கிருந்து பாதுகாப்பு படையின் தனி விமானத்தில் மூலம் மீண்டும் டெல்லிக்கு செல்லவிருக்கிறார்.

அமித்ஷாவின் சென்னை வருகையை முன்னிட்டு அவருக்கு எதிராக #Go_Back_Amitshah என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.