உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காவி உடை அணிவதை நிறுத்த வேண்டும்.. காங்கிரஸ் மூத்த தலைவரால் பேச்சால் பரபரப்பு

 
யோகி

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்துக்கு வணிகத்தை (முதலீடு) ஈர்க்க விரும்பினால், காவி உடை அணிவதை நிறுத்தி விட்டு,  நவீன ஆடைகளை அணிய தொடங்க வேண்டும் என்று காங்கிரஸின் ஹூசைன் தல்வார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் துறவு வாழ்க்கை வாழ்வதால் அவர் எப்போதும் காவி உடை அணிந்து இருப்பார். முதல்வர் யோகி ஆதித்யநாத் காவி உடை அணிந்து இருப்பதே காங்கிரஸ் அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல்வர் யோகி ஆதித்யநாத் காவி அணிந்து இருப்பதே விமர்சனம் செய்தார்.

ஹூசைன் தல்வார்

தற்போது உத்தர பிரதே காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஹூசைன் தல்வார், முதல்வர் யோகி ஆதித்யநாத் காவி உடை அணிவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடாபாக ஹூசைன் தல்வார் கூறுகையில்,  முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தில் வணிகத்தை ஈர்க்க விரும்பினால் நவீன ஆடைகளை அணிய தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதனையடுத்து பா.ஜ.க. ஹூசைன் தல்வாரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

பா.ஜ.க.வின் ராம் கதம் கூறியதாவது: இந்து மதத்தின் புனித நிறமான காவியின் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கும் அவர்களது கட்சியினருக்கும் ஏன் இவ்வளவு வெறுப்பு?. காவி என்பது நமது கொடியின் நிறம் மற்றும் நமது முனிவர்கள் மற்றும் துறவிகளின் ஆடை மட்டுமல்ல, அது தியாகம், சேவை, அறிவு, தூய்மை மற்றும் ஆன்மீகத்தின் சின்னமாகும். ஹூசைன் தல்வாரின் இந்த கருத்து காவி உடை அணிந்த நாட்டின் துறவிகள் மற்றும் புனிதர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.