×

மந்திரிகுமாரி படத்தின் வசனம் இன்று பேசப்பட்டிருந்தால்?

 

கருணாநிதி கதை,வசனத்தில் எம்.ஜி.ஆர். நடித்த மந்திரி குமாரி திரைப்படம் 1950ல் வெளிவந்தது.  இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பிரபல வசனத்தை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் தமிழக பாஜகவின் துணைத்தலைவரும், ஊடகப்பிரிவு மாநில பொறுப்பாளருமான நாராயணன் திருப்பதி 

மந்திரிகுமாரி படத்தின் வசனம் இன்று பேசப்பட்டிருந்தால்? என்ற தலைப்பில் அவர் எழுதிய பதிவு இது:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” 


மந்திரி குமாரி திரைப்படத்தின் வசனம். இன்று எழுதப்பட்டால் எப்படி அமைந்திருக்கும் என சிந்தித்தேன்.
“பார்த்திபா! நீ ஊழல் செய்வதை விட்டுவிடக் கூடாதா?”
“ஊழல் செய்வதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! ஊழல் செய்வது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். அடிப்படைவாதம் எனும் பயங்கரவாதம் எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், மதச்சார்பின்மை என்ற பெயரால் பயங்கரவாதம் அரசியலாகிறது. பேச்சாளர் பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறான். கருத்து சுதந்திரம்,மன்னிப்பு என்ற பெயரால் அருவருப்பு அரசியலாகிறது. அதுபோல ஊழலும், பெண் வன்கொடுமையும் ஒரு அரசியல் கலை தான்!”
“இந்தக் கலையை விட்டு விடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” 
ஆக 'கொள்ளை எனும் கலை' 'ஊழல் எனும் கலை' யாகியிருக்கிறது. அன்றும் இன்றும் என்றும் மாற்றமில்லை. இதுவே திராவிட மாடல்.