அவர்தான் அப்படி என்றால் அவரின் மகன்களும் அப்படித்தான் - மாஜி அமைச்சர் ஜி.பாஸ்கரன்
அவர்தான் அப்படி என்றால் அவரின் மகன்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ்ஐ விமர்சித்திருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜி. பாஸ்கரன். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் ஏன் ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கான காரணங்களை விளக்கி இருக்கிறார் அவர்.
சிவகங்கை தொகுதி எம்எல்ஏவாகவும், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத் துறைஅமைச்சராகவும் இருந்தவர் ஜி. பாஸ்கரன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தன்னை புறக்கணித்து விட்டதால் அதிருப்தியில் இருந்த அவர் தற்போது அதிமுகவின் விவகாரம் குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
கட்சியில் தனக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று வருத்தப்பட்டிருக்கும் அவர், எடப்பாடியார் முதல்வராக இருக்கும்போதே பொறுப்பு கேட்டேன். கொடுக்கவில்லை. இரண்டு முறை சென்று கேட்டுப் பார்த்தேன். அதற்கு பின் கெஞ்சவா முடியும்? அம்மா இருக்கும்போது முக்கியத்துவம் கொடுத்தார். அதற்காகத்தான் கட்சியில் இப்போதும் இருக்கிறேன் எப்போதும் இருப்பேன் என்றவர்,
ஓபிஎஸ்சி ஏன் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருகிறார் என்பது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் . ஆரம்பத்திலேயே ஓபிஎஸ் விட்டு விட்டார். எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை அவர் தக்க வைக்காமல் விட்டு விட்டார். யாருக்குமே அவர் எதுவும் செய்யவில்லை . அதனால் தான் அவர் பின்னால் சென்றால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைக்கிறார்கள்.
அது மட்டுமல்ல அவர்கள் பின்னால் சென்றால் பாதியிலேயே கழட்டி விடுவார் என்றும் அச்சப்படுகி பயப்படுகிறார்க. ள் அதனால் தான் அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட அவர் பக்கம் செல்ல மறுக்கிறார்கள். ஓபிஎஸ் இடம் இல்லாத பணம் இல்லை. ஆனால் அவர் செலவு செய்யவே மாட்டார். தேர்தலுக்கு கூட அவர் செலவு செய்ய மாட்டார். அவர் தான் அப்படி என்றால் அவர் மகன்களும் அப்படித்தான். அதனால்தான் அவர் கட்சியில் இருந்து இந்த அளவுக்கு ஓரம் கட்டப்பட்டிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார் வெளிப்படையாக.