முதல்வர் ஸ்டாலின் வாட்ச் 3 கோடி ரூபாயா?
முதல்வர் ஸ்டாலின் கட்டியிருக்கும் வாட்ச் விலை மூன்று கோடி ரூபாய் என்ற தகவலை பதிவிட்டுள்ளார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.
கடந்த 1ம்தேதி அன்று புத்தாண்டு தினத்தில் டாடா நிறுவனங்களின் தலைவர் என்.சந்திரசேகரன், முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த புகைப்படங்களை முதல்வரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் முதல்வர் ஸ்டாலின் கையில் கட்டியிருந்த வாட்ச், ரிச்சர்ட் மில்லே ஆர்எம் 067-01 ரோஸ் கோல்ட் பிளாக் ஸ்கெலட்டன் டயல், ஃப்ளை பேக் கால வரைபடம் கொண்ட வாட்ச் என்றும், இதன் விலை 2.75 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை என்றும் தகவல் வெளியிட்டுள்ளார் . ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த கடிகாரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்தார் என்றும் குறிப்பிட்டிருக்கும் சவுக்கு சங்கர்,
இந்த கைக்கடிகாரம் பிரசாந்த் குண்டேசா மூலமாக வாங்கப்பட்டதாக முன்பு தெரிவித்திருந்தோம். இந்த கடிகாரம் புதியது என்கிறார். மேலும், சபரீசன் முன்பு துபாய் சென்றபோது வாங்கியது அல்ல. இது புதியது என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் 5 லட்சம் ரூபாய் என்றும், அதற்கு பில் இருக்கிறதா என்று கேட்டு தொடர்ந்து அட்டாக் செய்து வந்தனர் திமுகவினர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து கேட்டு வந்தார். இதற்கு பதில் அளித்து இருந்த அண்ணாமலை, இந்த வாட்சுக்கு பில் மட்டும் இல்லை. மற்றபடி 13 ஆண்டுகள் நான் போலீசாக இருந்து சம்பாதித்தது. என் சொத்துக்கணக்கு முழுமையும் கணக்கு கொடுக்கிறேன். எனக்கு 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வந்திருக்கிறது. இன்னும் கணக்கு பார்க்கவில்லை. ஏப்ரல் மாதம் பிரஸ்மீட்டில் சொத்து கணக்கை வெளியிடுகிறேன் என்று சொன்னவர், முதல்வர் ஸ்டாலின் மருமகன் 14 கோடி ரூபாய் வாட்ச் கட்டுகிறார் . ஊழலைப் பற்றி பேசுவதற்கு எனக்கு இது ஒரு வாய்ப்பு. முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு 120 கோடி ரூபாய் வீடு வந்தது எப்படி என்று நானும் கேட்பேன் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
ஸ்டாலின் மருமகன் சபரீசன் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாட்ச்கள் கட்டுகிறார் என்று அப்போது சவுக்கு சங்கரும் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கட்டும் வாட்ச் 3 கோடி ரூபாய் என்ற தகவலை பதிவிட்டு இருக்கிறார் சவுக்கு சங்கர்.