×

’’விஜய் புதுவை முதல்வரை  சந்தித்தது இதற்குத்தானா?’’
 

 

 தலைவா பட பிரச்சினையின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார் விஜய்.   ஆனால் அது முடியவே இல்லை.   கொடநாடு எஸ்டேட் வரைக்கும் சென்று சந்திக்க முயற்சித்தார்.  ஆனால் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமலேயே சென்னை திரும்பினார் விஜய்.   அதன் பின்னர் மாஸ்டர் படத்தின் போதும் பிரச்சனை வந்தது.   

 தற்போது பீஸ்ட் படம் திரைக்கு வர இருக்கிறது.   இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு விஜய் வெளியே வர தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவரும் எதிரே வர இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.  இது தொடர்பான படங்கள், வீடியோக்கள் வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.   இந்த சந்திப்பு அல்லது முன்கூட்டியே திட்டமிட்ட சந்திப்பா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். 

 அண்மையில் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி,  விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.   இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை மூன்று மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவெடுத்திருப்பதாக திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கட்டண உயர்வுக்கு புதுச்சேரி அரசு அனுமதி என்று தகவல் வருகிறது.

 திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.   அவர், ‘’தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? - தமிழக மக்கள் கேள்வி.  சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்தது இதற்குத்தானா? - சினிமா ரசிகர்கள் கேள்வி’’என்று குறிப்பிட்டிருக்கிறார் .