மோடிதான் ஜெயலலிதாவை கொன்றார்! காரணம் இதுதான்! பகீர் கிளப்பும் திமுக எம்எல்ஏ
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி தான் கொலை செய்தார் என்றும், பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா நிற்க போவதாக சொன்னதால் அவர் கொல்லப்பட்டார் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
தொடக்கத்தில் ஜெயலலிதாவும் மோடியும் நண்பர்களாக இருந்தார்கள். மோடி அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தார். சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்டு சென்று இருக்கிறார். அந்த அளவுக்கு நட்பாக இருந்தார்கள். ஆனால் பின்னாளில், ‘மோடியா? லேடியா?’ என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் அளவிற்கு எதிரெதிர் துருவங்கள் ஆகிவிட்டார்கள் . அதன் பின்னர் ஜெயலலிதாவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு அங்கே சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டார். இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அடுத்த பெரியசாமிபுரம் கிராமத்தில் திமுகவின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பங்கேற்றார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ,கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்ட பின்னர் திமுகவிற்கு வந்து விட்டேன். ஜெயலலிதா இறந்தது மோடியால் தான். அவர்தான் ஜெயலலிதாவை கொன்று விட்டார். அதற்கு காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதாக ஜெயலலிதா சொன்னதால் பாஜக அவரைக் கொன்றுவிட்டது என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதன் பின்னர் பேசிய மார்க்கண்டேயன், திமுக அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிறைவேற்றி விட்டோம் . குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.