×

முடிவுகள் எடுப்பது குறித்து நாங்கள் கட்சியிடம் கேட்கிறோம், அவர்கள் குடும்பத்திடம் கேட்கிறார்கள்.. காங்கிரஸை கிண்டலடித்த நட்டா

 

முடிவுகள் எடுப்பது குறித்து நாங்கள் கட்சியிடம் கேட்கிறோம்,  அவர்கள் (காங்கிரஸ்) ஒரு குடும்பத்திடம் (சோனியா காந்தி குடும்பம்) கேட்கிறார்கள், இதுதான் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸூக்கும் உள்ள வித்தியாசம் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜே..பி. நட்டா பேசுகையில், 24 ஆண்டுகளில் காந்தி அல்லாத ஒருவராக காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேசமயம், காந்தியின் ரிமோட் கண்ட்ரோலில் இருந்து கட்சி இயங்கும் என்று காங்கிரஸ் கட்சியை ஜே.பி. நட்டா கிண்டல் செய்தார். ஜே.பி. நட்டா கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: 

முந்தைய ஐக்கிய முன்னணி (காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசாங்கம்) 10 ஆண்டுகள் ரிமோட் கண்ட்ரோலில் எப்படி செயல்பட்டது என்பது நமக்கு தெரியும். இது ஒரு கட்சி, அப்படி நடத்துவது எவ்வளவு கடினம். முடிவுகள் எடுப்பது குறித்து நாங்கள் கட்சியிடம் கேட்கிறோம். அவர்கள் (காங்கிரஸ்) ஒரு குடும்பத்திடம் (சோனியா காந்தி குடும்பம்) கேட்கிறார்கள், இதுதான் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸூக்கும் உள்ள வித்தியாசம். 

இமாச்சல பிரதேசத்தில் தற்போதுள்ள இடங்களை காப்பாற்ற காங்கிரஸ் போராடுகிறது. இது மூலோபாயத்தின் ஒரு பகுதி. அவர்களின் பலவீனங்களை நான் இப்போது வெளிப்படுத்த மாட்டேன், அதனால் அவர்கள் அவற்றை சரி செய்ய முடியும். நான் இன்று ஒரு ஸ்கோர் பெறமாட்டேன். அதனை டிசம்பர் 8ம் தேதிக்கு சேமிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.