×

காலநிலை மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க.வின் விசுவாசமான சிப்பாயாக மாறிவிட்டார்.. குலாம் நபி ஆசாத்தை தாக்கிய காங்கிரஸ்

 

காலநிலை மாற்றம் ஏற்பட்டு, இந்த மனிதர் பா.ஜ.க.வின் விசுவாசமான சிப்பாயாக மாறிவிட்டார் என்று குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அண்மையில் காங்கிரஸ் கட்சியுடான தனது 50 ஆண்டு கால உறவை முறித்துக் கொண்டு அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். மேலும், விரைவில் புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளை தொடங்கினார். இன்னும் சில தினங்களில் தனது புதிய கட்சியின் பெயரை குலாம் நபி ஆசாத் அறவிக்க உள்ளார்.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியது முதல் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத் பேட்டி ஒன்றில், நான் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கிறேன். ஆனால் ராகுல் காந்தியை போலல்லாமல் பிரதமர் மோடியை தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி அவரை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், குலாம் நபி ஆசாத் பேட்டி அளித்த வீடியோ ஷேர் செய்து, காலநிலை மாற்றம் ஏற்பட்டு, இந்த மனிதர் (குலாம் நபி ஆசாத்) பா.ஜ.க.வின் விசுவாசமான சிப்பாயாக மாறிவிட்டார் என தெரிவித்தார்.