×

நாங்கள்தான் எதிர்க்கட்சி என அண்ணாமலை சொல்வதில் தவறில்லை- ஜெயக்குமார்

 

நாங்கள்தான் எதிர்க்கட்சி என அண்ணாமலை சொல்வதில் தவறில்லை- ஜெயக்குமார்பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவுடன் கூட்டணி வைத்து கொள்ளட்டும், அதிமுக உடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  51 ஆம்  ஆண்டு தொக்க விழா கடந்த 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்றம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “உயர்க்கல்வி மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு தினந்தோறும் அதிமுக ஆட்சியில் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாலை அணிவிக்க அனுமதிப்பதில்லை, ஆகையால் வரும் 17ம் தேதி அதிமுக பொன்விழா ஆண்டிற்கு அனுமதிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை பொறியாளரை சந்தித்து மனு கொடுக்க வருகை தந்தோம், ஆனால்  சந்திக்க நேரம் கொடுத்து விட்டு வரும் போது இருக்கையில் இல்லை, மனு வாங்க ஆளே இல்லை. அவரவர் சார்ந்த கட்சியை அவர்கள் முன்னிலைப்படுத்தி பேசுவார்கள் எனவே எதிர்க்கட்சி நாங்கள் தான் என பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது தவறு என சொல்ல முடியாது” என்றார்.