×

மூடு மந்திரம்...  கருணாநிதியின் டுவிட்டர் பதிவுகள்

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.  இந்த அறிக்கையின் பல பகுதிகள் தமிழக அரசியலில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன.  

 இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மறைந்த  திமுக தலைவரும்,  முன்னாள் முதல்வருமான கருணாநிதி முன்வைத்த குற்றச்சாட்டுகள்- டுவிட்டர் பதிவுகள் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டில் செப்டம்பர் 22ஆம் தேதி அன்று காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.  அதன் பின்னர் 24ஆம் தேதி அன்று அவரின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

 அந்த நிலையில்  கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ,   ‘’சமூக வலைதளம் உள்ளிட்டவற்றின் மூலமாக வீண் வதந்திகளை பரப்பி அதை நம்பிக்கொண்டு அவருடைய கட்சித் தொண்டர்களே வேதனை அடைகின்றனர்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.   அவர் மேலும்,   ’’ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தை போக்கிட யாரும் முன் வரவில்லை’’ என்றும் தெரிவித்திருந்தார்.

 ’’அதிமுக உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரை முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக போட்டு காரியங்கள் நடப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்’’ என்றும்,   ’’ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பற்றி அவர் யாரையும் சந்திக்க அனுமதிக்க இல்லை’’ என்றும் பதிவிட்டிருந்தார்.