×

பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் அது நிறைவேறும் என்பது மக்களுக்கு புரியவில்லை... மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

 

பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் அது நிறைவேறும் என்பது மக்களுக்கு புரியவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசம் கதுவாவில் மகாராஜா குலாப் சிங்கின்  20 அடி சிலையை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் ஜிதேந்திர சிங் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் அது நிறைவேறும் என்பது மக்களுக்கு புரியவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததைப் பற்றி பேசும் போது மக்கள் கேலி செய்தார்கள்.

ஆனால் நாங்கள் எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றினோம். அதேபோல் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கமிக்கப்பட்ட ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதியை விடுவிப்போம் என்பது எங்கள் வாக்குறுதி. பாகிஸ்தான் அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பின்கீழ் ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதிகளை காலி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 1994ல் நாடாளுமன்றம் ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிப்பது எங்கள் வாக்குறுதியாகும்.

1980ம் ஆண்டில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பா.ஜ.க. மத்தியில் ஒரு நாள் ஆட்சி அமைக்கும் என்று வாக்குறுதி அளித்தார். மக்கள் அதை கேலி செய்தனர். இன்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பா.ஜ.க. கட்சி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.