×

தமிழர்களை சுரண்டி ஆடம்பரம், உல்லாசம்! சீமானை சாடிய ஜோதிமணி

 

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல்  புகார் அளித்திருந்தார்.  அதில் உண்மை இல்லையென்றால் இது குறித்து சீமான் நீதிமன்றத்தில் ஏன் நஷ்ட ஈடு வழக்கு போடவில்லை.? என கரூர் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மறைந்த முன்னாள் முதல்வர் என்ன பெரிய தியாகியா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் சீமான் பாலியல் குற்றவாளி சட்டம் சரியாக விசாரித்து இருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என கூறியிருந்தார். இந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள சீமான், கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என கடுமையான விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்பி ஜோதிமணி, “ராஜீவ் காந்தியை சீமான் தவறாக பேசியதற்கு பதில் கூறிய என்னை, தனிப்பட்ட வகையில் ஆபாசமாக விமர்சனம் செய்துள்ளார்.  அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாச தாக்குதல் நடத்தினால் பயந்து ஓடி விடுவார்கள் என நினைக்கிறார்கள். எனக்கு இது புதிதல்ல பாஜகவின் பி டீம்தான் நாம் தமிழர் கட்சி. கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என பேசிய சீமான்
இதற்கு  மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்கள்  உழைத்து வாழக் கூடியவர். சீமான் போல இலங்கை தமிழ் மக்களை, தமிழர்களை சுரண்டி ஆடம்பர, உல்லாச வாழ்க்கை வாழக்கூடியவர்கள் இல்லை. கரூர் மக்களை தொகுதி பேச சீமானுக்கு அருகதை இல்லை. 

நடிகை விஜயலட்சுமி பொது வெளியில் சீமான் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். உண்மை இல்லை என்றால் இதற்கு ஏன் சீமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம். சீமான் பாலியல் குற்றவாளி இதற்கு என் மீது கூறியதே சாட்சி” எனக் கூறினார்.