×

கே.பி.முனுசாமி குவாரிக்கு சீல் வைத்து விட்டேன் - துரைமுருகன் பரபரப்பு
 

 

ஓபிஎஸ்க்கு ஸ்டாலின் உதவி செய்கிறார்.  திமுகவின் தயவில்தான் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்றார் என்றெல்லாம் எடப்பாடியும், அவரது  தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.   ஆனால் ஓபிஎஸ் அணியில் உள்ள கேபி முனுசாமிக்கு டெண்டர் ஒதுக்கி இருக்கிறார் துரைமுருகன். அதன் மூலமாக பெற்ற அந்த டெண்டர் மூலம் மாதம் 2 கோடி ரூபாய் கேபி முனுசாமிக்கு வருமானமாக கிடைக்கிறது என்று போட்டு உடைத்து இருக்கிறார் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன்.

 அது மட்டுமல்லாமல் தங்கமணி , முனுசாமி உட்பட பலரும் தங்கள் பணத்தை பாதுகாக்க ஊழலிலிருந்து தப்பிக்க ஸ்டாலினுக்கு ஆதரவாக திரும்பி விட்டார்கள். அதனால் இவர்கள் இப்போது ஸ்டாலினை எதிர்த்து  பேசுவதில்லை என்றெல்லாம் ரகசியங்களை உடைத்து இருந்தார்.  எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரின் ரகசியங்களை இப்படி ஒரு ஆடியோ மூலம் வெளிப்படையாக போட்டு உடைத்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். 

 இந்த நிலையில் ஓபிஎஸ்-க்கு திமுக சலுகை காட்டுகிறதா?  எடப்பாடி அணியில் உள்ள  கேபி முனுசாமிக்கு டெண்டர் ஒதுக்கியது.. என்று துரைமுருகனிடம் ,  கோவை தனியார் ஓட்டலில் கீழ் பவானி பாசன விவசாயிகள் முத்தரப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இவ்வாறு கேட்டபோது,   ’’பொன்னையன் முன்ன மாதிரி இல்ல இப்ப வேற மாதிரி’’ என்று கமெண்ட் அடித்தார்.    அவர் மேலும்,   கேபி முனுசாமி குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்து விட்டேன்.   இப்போது போன மாதம் 20 பாறைகளுக்கு டெண்டர் போட்டும் அதில் அதிகபட்ச டெண்டர் ஒன்றை அவர் எடுத்திருக்கிறார்.   மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னவர்,   அதிமுகவினர் யாருக்கும் சலுகை காட்ட வில்லை .   சலுகை காட்டுகிறது திமுக என்று அரசியலுக்காக செல்கிறார்கள் என்றார்.