×

பாஜகவின் சர்வாதிகார போக்குக்கு, அசாம் நீதிமன்றம் சம்மட்டி அடி.. - கே.எஸ்.அழகிரி

 

குஜராத்தில் காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி வழக்கில்,  கேள்வி எழுப்பினால் சிறைவாசம் என்கிற பாஜகவின் சர்வாதிகாரப் போக்குக்கு அசாம் நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் காங்கிரஸ் ஆதரவு குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியை, பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த பா.ஜ.க. இரண்டு வழக்குகளில் அவரை கைது செய்து, முகத்தில் தானே கரியைப் பூசிக் கொண்டுள்ளது.   நாட்டில் நிலவும் வகுப்புவாத பிரச்சினை தொடர்பாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு பிரதமருக்கு மேவானி ட்வீட் செய்திருந்தார். ஓர் இந்திய குடிமகனாக, மக்கள் பிரதிநிதியாக இந்த கேள்வியை எழுப்ப அவருக்கு உரிமை உண்டு.

முதல் வழக்கில் ஜாமீன் பெற்றதும் அசாமின் பெண் போலீஸ் அதிகாரியை தரக்குறைவாகப் பேசியதாக இந்திய தண்டனைச் சட்டம் 294 ஆவது பிரிவின் கீழ் மற்றொரு வழக்குப்   பதியப்பட்டது. முதல் வழக்கில் ஜாமீன் பெற்றதும் அசாமின் பெண் போலீஸ் அதிகாரியை தரக்குறைவாகப் பேசியதாக இந்திய தண்டனைச் சட்டம் 294 ஆவது பிரிவின் கீழ் மற்றொரு வழக்குப்   பதியப்பட்டது.

பா.ஜ.கவை எதிர்த்த ஒரே காரணத்துக்காக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு, அசாம் நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்திருக்கிறது. கேள்வி எழுப்பினால் சிறைவாசம் என்ற பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குக்கு, இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.