×

பிரதமர் அலுவலகம் கூறியததால்தான் மோடியின் நிகழ்ச்சிகளில் தெலங்கானா முதல்வர் பங்கேற்கவில்லை.. கே.டி. ராம ராவ்

 

தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என பிரதமர் அலுவலகம் கூறியததால் தான் மாநில முதல்வர் கே.சந்திரசேகரர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையத்தை நேரடியாக சென்று பார்வையிட்டார். அந்த நிகழ்வில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை. இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹைதராபாத் வந்த பிரதமர் ராமானுஜாச்சாரியாரின் சமத்துவ சிலை திறந்து வைத்தார். பிரதமர் மோடி ஹைதராபாத் வந்தபோது அவரை விமான நிலையத்துக்கு சென்று கே.சந்திரசேகர் ராவ் வரவேற்கவும் இல்லை, சமத்துவ சிலை திறப்பு விழாவிலும் கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை.

பிரதமர் மோடி பங்கேற்ற இரண்டு நிகழ்வுகளிலும் அவரை வரவேற்க மற்றும் தனிப்பட்ட முறையில் விருந்தளிக்கவும் கே.சந்திரசேகர் ராவ் வரவில்லை. இது அப்பட்டமான விதிமுறைமீறல் என பலர் குற்றம் சாட்டினர். ஆனால் அந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வேண்டும் என்றே புறக்கணிக்கவில்லை, பிரதமர் அலுவலகம் வரக்கூடாது என்று தெளிவாக கூறியததால்தான் பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவில்லை என கே.டி.ராம ராவ் தெரிவித்தார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி. ராம ராவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். கே.டி. ராம ராவ் கூறியதாவது: அந்த இரண்டு (பிரதமர் மோடியின் தெலங்கானா வருகை) நிகழ்வுகளிலும் முதல்வர் வரக்கூடாது என பிரதமர் அலுவலகம் தெளிவான செய்தியை அனுப்பியது. 

பிரதமர் அலுவலகம் தரப்பில் நெறிமுறை மீறல்கள் மற்றும் ஒரு பிரதமரால் ஒரு முதலமைச்சர் அவமானப்படுத்தவில்லையா? இது அவமானம் இல்லையா?. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க. தலைவர் போல் நடந்து கொள்கிறார். குடியரசு தின உரையை அவர் வாசித்தார். அது அமைச்சர்கள் குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் அரசியல் கருத்துக்களை கூறிவருகிறார். மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் கூட தெலங்கானா முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களை அவமதித்தவர்கள். நெல் கொள்முதல் போன்ற கடுமையான பிரச்சினைகளை நாங்கள் எழுப்பியபோது மத்திய அமைச்சர் பியூஷ்  கோயல் கேலி செய்தார். நாங்கள் (தெலங்கானா) ஒரு செயல்திறன் கொண்ட மாநிலம் என்பதை அவர்கள் (மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி) ஒப்புக்கொள்ள மற்றும் எங்களை கண்ணியத்துடன் நடத்த மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.