×

பா.ஜ.க. அல்லது பிற கட்சிகளுடன் காங்கிரஸ் போட்டியிடுவது கடினம்.. முன்னாள் காங்கிரஸ் தலைவர் தாக்கு

 

காங்கிரஸ் செயல்படும் விதத்தில், பா.ஜ.க. அல்லது பிற கட்சிகளுடன் போட்டியிடுவது கடினம் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கம்ருல் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்தார்.

அசாம் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான கம்ருல் இஸ்லாம் சவுத்ரி கடந்த சில தினங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், கடந்த சில மாதங்களாக அசாம் காங்கிரஸின் திசையற்ற மற்றும் குழப்பான தலைமையை மேற்கோள் காட்டி அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தையும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கம்ருல் இஸ்லாம் சவுத்ரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கம்ருல் இஸ்லாம் சவுத்ரி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் இருந்து எந்த காங்கிரஸ் தலைவர்களும் அசாமில் காங்கிரஸின் நிலை குறித்து களஆய்வு செய்ய வாரதது வருத்தமளிக்கிறது. 

மக்கள் (தொண்டர்கள்) காங்கிரஸில் இருப்பது கடினம். முதலில் காங்கிரஸை ஒன்றுப்படுத்துங்கள், பிறகு இந்திய ஒற்றுமை பயணத்தை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸின் நிலை இங்கு (அசாமில்) மிகவும் மோசமாக உள்ளது. மாவட்ட அளவில் குழுவாதம் நடக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவராக பூபன் போரா ஆனதிலிருந்து, பதவியின் மதிப்பு முடியும் தருவாயில் உள்ளது. காங்கிரஸ் செயல்படும் விதத்தில், பா.ஜ.க. அல்லது பிற கட்சிகளுடன் போட்டியிடுவது கடினம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.