ஓபிஎஸ் அணியில் இருந்து கோவை செல்வராஜ் விலகுவதாக அறிவிப்பு
ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து விலகுவதாக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கோவை செல்வராஜ், “ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வெளியான பின் ஓபிஎஸ்- பதவிக்காக ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு அப்போல்லோவில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அவரை வெளிநாடு அழைத்து சென்று உயிரோடு கொண்டுவரவில்லை. சுயநலவாதிகளுடன் சேர்த்து பணியாற்ற எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவின் உயிரைவிட பதவி முக்கியம் என செயல்பட்டுள்ளனர். ஈபிஎஸ்- ஓபிஎஸ் என இருவரின் தலைமையில் செயல்படவிரும்பவில்லை. ஜெயலலிதாவுக்காக இந்த இயக்கத்தில் பணியாற்றினேன், செயல்பட்டேன். தற்போது சுயநலத்திற்காக சண்டை போடுகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. கட்சியை அழிக்கும் செயலில் நான் ஈடுபடக்கூடாது என விலகுகிறேன். அதிமுகவில் இருந்து விலகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.