×

“எடப்பாடி பழனிசாமி ரோஷம், சூடு, சொரணை இல்லாதவர்”

 

தேனி பெரியகுளம் பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திய பின் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர் ஆன கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற ஓபிஎஸ்  புலியாக மாறி தாக்குவார். கட்சியில் உள்ள சண்டைக்கும் குழப்பத்திற்கும் காரணம் ஜோக்கர் ஜெயக்குமார் தான். எனவே  ஜெயக்குமார் போன்ற ஆட்கள் இனிமேல் கட்சியில் தலை தூக்க முடியாது. தலைமைச்  செயலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே உள்ள பத்திரங்களை களவாடிச் சென்றுள்ளதாக இபிஎஸ் கூறுகின்றார். பத்திரங்களை என்ன வெளியிலா போட்டிருப்பார்கள். லாக்கரிலோ, பீரோவிலோ இருந்த பத்திரங்கள் காணவில்லை என்று கூறுவது அபத்தமானது. அதனை ஓபிஎஸ் தரப்பினர் திருடி இருப்பார்கள் என்று நிரூபித்தால்  தான் தற்கொலை செய்து கொள்ள தயார்.

தன்னுடைய சுயலாபத்திற்காக எடப்பாடி கட்சியை கைப்பற்ற நினைக்கிறார் என்று நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் அவர் அரசியலை விட்டு துறவறம் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மீண்டும் கட்சியை கைப்பற்றி ஒரு கம்பெனி நடத்த நினைப்பது என்பது எடப்பாடி ரோஷம், சூடு சொரணை இல்லாதவர் என்பதை நிரூபிக்கின்றது. வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.