×

நிலத்தை பிடுங்கிக்கலாம் - அமைச்சர் சர்ச்சை பேச்சு

 

நிலத்தை யாரிடமும் கேட்காமல் நாமளே பிடுங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி பகிரங்கமாக பேசியது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல்லில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நகராட்சி திட்ட பணிகள் ஆலோசனை கூட்டத்திற்கு நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு தலைமை தாங்கினார்.    கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டனர்.

 இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது மாநகராட்சிக்கு சொந்தமான 15 ஏக்கர் இடம் உள்ளது.   அதற்கு கூடுதலாக இடம் வேண்டும் என்றால் அருகில் இருப்பவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு நஷ்ட ஈடு வழங்காமல் பேருந்து நிலையத்தை ஆரம்பித்து விடலாம் என்றார்.

 அதிகாரிகள் அமைச்சர்கள் முன்னிலையில் அவர் இப்படி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .  அரசு நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சரே யாரிடமும் அனுமதி பெறாமல் நஷ்ட ஈடும் வழங்காமல் நிலத்தை பிடுங்கிக் கொள்ளலாம் என்று அதிகார தோரணையில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கூட்ட அரங்கிலேயே  பெரும் சலசலப்பு ஏற்பட்டது.