×

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்  அகிலேஷ்

 

 உத்தர பிரதேச தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்.

 உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.   இதில் பாஜக மட்டுமே 255 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.   கடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வென்ற சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வென்றுள்ளது.  சமாஜ்வாதி கட்சி மட்டும் தனியாக 111 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. 

 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில்,   உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக எம்எல்ஏக்கள் அதிக வாக்குகளை அளித்த மக்களுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.  மேலும்,  பாஜகவின் வெற்றி எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதை சமாஜ்வாதி நிரூபித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் கர்ஹால்  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.  பாஜக வேட்பாளரை விட 67 ஆயிரத்து 504 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அகிலேஷ். 

 முதல் முதல்வராக இருந்த போதிலும் மேல்சபை உறுப்பினராக இருந்தார் அகிலேஷ்.  இந்த தேர்தலில் தான் முதல் முறையாக நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளார் . ஆனால்,  தற்போது அசம்கர்  மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் அகிலேஷ்,  இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற நிலையில் மக்களவை உறுப்பினராகவே நீடிக்க விரும்புவதாக தகவல்.

இதற்காக அவர் கர்ஹால் எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்ய இருப்பதாக கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.