ரகசிய மகா சண்டி யாகத்தில் அமைச்சர் முருகன்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பழனியில் ரகசிய மகா சண்டியாகத்தில் பங்கேற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு வந்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். சாமி தரிசனம் செய்த பின்னர் பழனி மலை கோயிலில் புலிப்பாணி ஆதீன ஆசிரமத்தில் நடந்த மகா சண்டி யாகத்தில் கலந்து கொண்டிருக்கிறார் .
நேற்று மாலை முதல் இந்த யாகம் நடந்து வருகிறது. நேற்று மாலையும் யாகத்தில் கலந்து கொண்ட அமைச்சர் , இன்றும் யாகத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த யாகத்தில் அமைச்சரை தவிர பாஜகவினர் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. வேறு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. பொதுமக்களுக்கும் அப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்காமல் யாகத்தில் பங்கேற்க மட்டுமே தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று கோவில் தரப்பு சொன்னாலும், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் பழனி அடிவாரத்தில் இருக்கும் புலிப்பாணி ஆதீன ஆசிரமத்திற்கு செல்வது வழக்கம் . ஆனால் அங்கே மத்திய அமைச்சரின் யாகம் நடப்பதால் பக்தர்கள் ஏன் தங்களை அனுமதிக்காமல் ரகசியமாக நடத்துகிறார்கள் என்று குழப்பத்துடன் செல்கின்றனர்.