அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன் விவகாரம் தொடர்பாக இந்த கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த காலகட்டங்களில் ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக சொல்லி லட்சக்கணக்கில் செந்தில் பாலாஜி பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம். பி., எம். எல். ஏ. கில் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது . இதற்கிடையில் இந்த மோசடியின் மூலமாக சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இது எதிராக அமலாக்க துறையும் கடந்த 2021 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது .
இந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழாக்கத்துறை சமன் அனுப்பியிருந்தது தனக்கு அனுப்பப்பட்ட இந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்து உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கடந்த ஒன்னாம் தேதி அன்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தை கேட்க வேண்டும் என்று சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.