×

அமைச்சரே சொல்லிட்டார்.. அண்ணாமலையிடம் மன்னிப்பு கேளு ... ராஜீவ்காந்தி மீது பாஜக ஆவேசம்

 

அரவேக்காடு  அண்ணாமலை உண்மையிலேயே ஐபிஎஸ் மெரிட்ல பாஸ் ஆனிங்களானு சந்தேகமாகத்தான் இருக்கு! அவசர சட்டம் என்பதே அரசாங்கத்தின் GO தான். ஆன்லைன் அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு GO போடலைனு கேக்குற அரசியல் கோமாளி நீதான்யா என்று கடுமையாக விமர்சித்திருந்தார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.

ஆனால் சட்டத்துறை  அமைச்சர் ரகுபதியோ, இன்று ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  இன்னும் GO போடவில்லை என்று சொன்னார். அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகுதான் அதற்கான விதிமுறைகளை வகுப்போம்.   அரசு பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  ஜிஓதான் போடப்படவில்லை என்று தெரிவித்தார். 

இதையடுத்து,  அரைவேக்காடு  ராஜீவ்காந்தி , அரசியல் கோமாளி நீ தான்யா . உங்க அமைச்சர் கூறுவதை மறுத்தாலும் நீ கோமாளி நீ தான்யா.  அண்ணாமலையிடம் மன்னிப்பு கேளுயா என்று ஆவேசப்பட்டிருக்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.