×

மோடி அறைக்கு சென்ற ஓபிஎஸ்-இபிஎஸ்: வெளியேற்றிய அதிகாரிகள்

 

 பிரதமர் மோடி நேற்று சென்னை வந்த போது அவரை வரவேற்பதற்காகவும் வழியனுப்புவதற்காகவும் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமியியும், ஓ. பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையம் சென்றிருந்தனர்.   வரவேற்றபோது இருவரிடமும் பூங்கொத்து பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி,  வழி அனுப்பும் போது எதுவும் பேசாமல் சென்றிருக்கிறார் .  தனியாக பேச வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அறையை நோக்கி இருவரும் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி இல்லை என்று இருவரையும் வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள்.

வரவேற்பின் போது எடப்பாடி பழனிச்சாமி ,  ஓ. பன்னீர்செல்வம் இருவரும் அருகருகே நின்றாலும் ஓபிஎஸ்-க்கு பிரதமர் கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்து கடுகடுத்த நின்று இருக்கிறார் எடப்பாடி.

 திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து நேற்று தனி விமான மூலம் பிற்பகல் இரண்டு 40 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.  மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியும்,  அவருடன்  முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் ,உதயகுமார், நத்தம் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

 ஓ .பன்னீர்செல்வத்துடன் ரவீந்திரநாத் எம்பி, தர்மர் எம்பி ,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.   ஆளுநர் ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன்,  பி. மூர்த்தியும்,  மற்றும் பாஜகவினர் அதிகாரிகள் உட்பட 42 பேர் பிரதமரை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  பிரதமர் தன்னை வரவேற்க வந்தவர்களிடம் ஒவ்வொருவராக சந்தித்து பூங்கொத்து வாங்கிக் கொண்டே வந்தவர் ,  எடப்பாடி பழனிச்சாமி இடம் முதலில் பூங்கொத்து பெற முயன்ற பிரதமர்,  ஓ. பன்னீர்செல்வம் வரிசையில் சற்று தள்ளி இருப்பதை கவனித்து அருகே வருமாறு அவரை அழைத்திருக்கிறார்.  பின்னர் பன்னீர் செல்வத்திடமும் பழனிச்சாமியிடமும் ஒரே நேரத்தில் பூங்கொத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

 ஓபிஎஸ்-க்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்ததை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி கடுகடுத்து போய் நின்று இருக்கிறார்.   அதன் பின்னர் பிரதமர் மோடி விமான நிலையத்தின் ஓய்வறைக்கு சென்று விட்டார்.   ஓய்வறையில் இருந்து திரும்ப வரும் பிரதமரை சந்தித்து பேசலாம் என்று  எடப்பாடியும் ஓபிஎஸ்சும் அந்த அறையை நோக்கி சென்று இருக்கிறார்கள்.  அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இங்கு இருக்கக் கூடாது.  பிரதமர் வெளியே வரும்போது அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு இருக்கலாம் என்று சொல்லி வெளியேறும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.  இதனால் வேறு வழி இன்றி எடப்பாடியும் ஓபிஎஸ்சும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ஓட்டல்களில் சென்று தங்கி இருக்கிறார்கள். 

 பிரதமர் திண்டு காந்திகிராமத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து புறப்படும் போது அதே போல் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் வரிசையில் நின்று இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களிடம் இப்போதாவது ஏதாவது பிரதமர் பேசுவார் என்று இருவருமே எதிர்பார்த்து நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் எதுவுமே சொல்லாமல் பிரதமர் கடந்து சென்று இருக்கிறார்.