×

மின்சாரம், குடிநீர் விநியோகத்தை துண்டிப்போம் என ராணுவ அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.. தெலங்கான அரசை சாடிய பா.ஜ.க.

 

ராணுவ கன்டோன்மெண்ட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை துண்டிக்க போவதாக ராணுவ அதிகாரிகளை டி.ஆர்.எஸ். அரசாங்கம் மிரட்டுகிறது என பா.ஜ.க. குற்றம் சாட்டியது. 

தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் கடந்த சில தினங்களுக்கு முன், எப்போது வேண்டுமானாலும் சாலைகளை மூடுவதும், அவர்கள் விரும்பியதை செய்வதும் சொல்வதும் நியாயமில்லை, ராணுவ கன்டோன்மென்ட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை துண்டிக்கப்போவதாக கூறியுள்ளார். இது பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் என்.வி. சுபாஷ் கூறியதாவது: தெலங்கானா  அமைச்சர் கே.டி.ஆரின் கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் நன்கு படித்தவர். நமது இந்திய ராணுவத்தின் மீது அவருக்கு மரியாதை இல்லை. 

நமது ராணுவத்தை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதில் தெலங்கானா அரசின் நிலைப்பாட்டை இது காட்டுகிறது. இன்று அவர்கள் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை துண்டிக்கும் அறிக்கைகள் மூலம் நம் ராணுவ அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர். ஹைதராபாத்தில்இருந்து ராணுவ தளத்தை அகற்ற முயற்சிக்கிறார்களா?. டி.ஆர்.எஸ். (தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி) அரசாங்கம் சொல்வதை யாராவது கேட்கவில்லை என்றால், அவர்கள் அவர்களை அச்சுறுத்தத் தொடங்குகிறார்கள். இது எல்லா நேரத்திலும் வேலை செய்யாது. 

விரைவில் பொதுமக்கள் அவர்கள் பாடம் புகட்டுவார்கள். ராணுவ அதிகாரிகளை மிரட்டுவதை ஏற்க முடியாது. அதை கண்டிக்கிறோம். டி.ஆர்.எஸ். அரசாங்கம் நமது ராணுவ அதிகாரிகளுக்கு மரியாதை காட்டும் விதத்தில் வெட்கப்பட வேண்டும். ஏதேனும் பிரச்சினை இருந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி மென்மையாக தீர்வு காண வேண்டும். இவர்கள் மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்துவதால் அனைவருக்கும் அது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.