×

மத்திய அரசு தூங்கி கொண்டிருந்ததால் மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்தனர்.. நானா படோல்

 

மத்திய அரசு தூங்கி கொண்டிருந்தது, அதனால்தான் மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்தனர் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிா  மாநிலம் மும்பையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு தூங்கி கொண்டிருந்தது, அதனால்தான் மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்தனர். பிரதமர் மோடி ஒரு பிரச்சாரகர், அவர் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார். அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துள்ளது.

புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் (புனே மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி  நேற்று தொடங்கி வைத்தார்) பெருமையை பா.ஜ.க. எடுத்துக் கொள்கிறது. அதேசமயம் அனைத்து திட்டங்களும் காங்கிரஸ் அடித்தளம் அமைத்தது. நகரில் மெட்ரோவின் வரவை எடுத்துக்கொண்டு பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆனால் இந்த திட்டங்களுக்கு எல்லாம் காங்கிரஸ் அடித்தளமிட்டது.

புனே மாநகராட்சி வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின்  சிலை சிறப்பு விழாவின் போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட தலைபாகையில் மகாராஜாக்கள் பயன்படுத்திய வைரமான ராஜ்முத்ரா இருந்தது. இதன் மூலம் மராட்டிய வீரரை பா.ஜ.க. அவமதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் கடந்த சனிக்கிழமையன்று புனே மேயர் முரளிதர் மொஹோல், தலைப்பாகையுடன் அத்தகைய வைரம் எதுவும் இணைக்கப்படாத தலைப்பாகையின் படத்தை பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.