×

நாஞ்சில் சம்பத் தே.பா.சட்டத்தில் கைதாகிறாரா? 

 

 திமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நாடார் சங்கத்தினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.   ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மிகவும் தரக்குறைவாக பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர்.

 தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில்,   தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெண் என்றும் பாராமல் அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மரியாதை தராமல் மரியாதை குறைவாக திமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.   அதனால் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 மேலும்,  அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கவர்னர் பதவி இருக்கக்கூடாது.   கவர்னரை நான் ஏன் மதிக்க வேண்டும் என்று மிகவும் தரக்குறைவாக பேசி இருக்கிறார்.  அதனால் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.