×

பன்றி பசு ஆகி விடுமா?, ஆர்எஸ்எஸ் பற்றி பேச வீரமணிக்கு அருகதை இல்லை- பாஜக துணைத் தலைவர்

 

வாக்கிற்காக மொழிகளை வைத்து அரசியல் செய்கிறது திமுக அரசு என தமிழக பாஜக துணைத் தலைவர்  நாராயண திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். 

 சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப்பாலா என அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தது தொடர்பாக,  தமிழக பாஜக துணைத் தலைவர்  நாராயண திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா  தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளோம் இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழுக்கு இழிவு ஏற்படுத்தி விட்டதாக குறைகளை கூறுகிறார். முழுமையாக எதையும் படித்து தெரிந்து கொள்ளாமல் குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனவும்  தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருகிற கட்சி பாஜக எனவும்  தமிழ் மொழியை அழிப்பதற்கான  அனைத்து நடவடிக்கைகளையும் திமுக எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவதற்காக  ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி  ஓட்டுக்காக திமுக மக்களை தூண்டுகிறது. மத்திய அரசு போட்டி தேர்வுகளில் கட்டாய ஆங்கிலம்  பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை திணிக்கிறோம்  என திமுக கூறி வருகிறது, ஆனால் உண்மையாக பரிந்துரையில் என்ன குறிப்பிட்டுள்ளோம்.

 முழுமையாக படிக்காமல் பேசுவது எந்த விதத்திலும் சரியானது இல்லை எனவும் அந்த பரிந்துரையில் குறிப்பிட்டது என்னவென்றால் அந்த அந்த மாநிலங்களின் தாய் மொழியை  கட்டாய பாடத்திட்டமாக நாங்கள் கொண்டு வந்து உள்ளோம் இதுதான் அந்த பரிந்துரையில் குறிப்பிட்டு உள்ளது. 

 தற்போது பார்த்தோம் என்றால்  மக்களிடையே ஆங்கிலத்தில் திணிப்பது மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு தான் என குற்றச்சாட்டு வைத்தார் மேலும் வாக்கிற்காக மொழிகளை வைத்து அரசியல் செய்கிறது திமுக அரசு என கூறினார். 

தமிழகத்தில் மழை காலங்கள் தொடங்கியுள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணி 90 சதவீதம் முடிவடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கே மாறாக இருக்கிறது என மக்கள் அனைவரும் அறிவார்கள் எனவும் குறிப்பாக சென்னையில் எங்கு பார்த்தாலும் மரணங்கள் ஏற்படுத்தக்கூடிய பள்ளங்களாக இருந்து வருகிறது, நிர்வாகத்தில் சற்று கூட அக்கறை இல்லாத திமுக அரசுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுவார்கள் என கூறினார்..

ஆர்எஸ்எஸ் பேரணி நடக்க கூடாது என்பதற்காக திட்டமிட பட்ட நாடகம் தான் இன்று நடைபெற இருக்கும் மனித சங்கிலி பேரணி,   திருமாவளவன் போன்றவர்களை தூண்டி விட்டு மதங்களுக்கு எதிராக பேச வைப்பது, மேலும் இல்லாத ஒன்றை இருப்பது போல் பேசி மக்களிடம் ஏமாற்று அரசியலை திமுக செய்து வருகிறது மனித சங்கிலி பேரணியை தமிழக அரசு தடை செய்திருக்க வேண்டும் என்ன கூறினார். ஓநாய் சைவம் ஆகி விடுமா என்று வீரமணி பேசியதற்கு பன்றி பசு ஆகி விடுமா? எனவும் ஆர் எஸ் எஸ் பற்றி பேசுவதற்கு வீரமணிக்கு துளி கூட அருகதை இல்லை என்றும் கூறினார்.