×

அடுத்து குலாம் நபியா?  கடும் கோபத்திற்கு இதுதான் காரணமா?
 

 

 தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காது என்கிற யூகத்திலேயே காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில்சிபல் கட்சியில் இருந்து விலகினார். அப்படி ஒரு முடிவை குலாம்நபி ஆசாத்தும் எடுக்கப் போகிறார் என்று காங்கிரஸில் சலசலப்பு எழுந்திருக்கிறது.  குலாம் நபி ஆசாத்தும் தனக்கு ராஜ்யசபா சீட்டு வழங்காததால் கட்சி மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்.

 ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , ஆனந்த் சர்மா இருவரும் தங்களுக்கு சீட்டு கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள் .  காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இருவரின் பெயரும் இல்லாமல் போகவே இருவரும் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் கட்சித் தலைமையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என சோனியாவுக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார்கள்.   அன்றுமுதல் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் ஒரு சிலரைத் தவிர்த்து பெரும்பாலானோரை கட்சித் தலைமை புறக்கணித்து வருகிறது .

சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த சிந்தனையாளர்கள் கூட்டத்திற்கும் குலாம்நபி ஆசாத்துக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை.   இது ஜம்மு-காஷ்மீரில் குலாம்நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 இந்தநிலையில் ராஜ்யசபா சீட்டும் பறிபோனதால் குலாம் நபி ஆசாத் கடும் கோபத்தில் உள்ளாராம் .  அதனால் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று அவர் ஆலோசித்து வந்திருக்கிறார்.   இதைக் கேள்விப்பட்ட சோனியா காந்தி உடனே குலாம் நபி ஆசாத்தை டெல்லிக்கு அழைத்து இருக்கிறார்.   காங்கிரஸ் தலைமையில் இரண்டாம் கட்ட தலைமை பொறுப்பை ஏற்குமாறு கேட்டிருக்கிறார்.  அதற்கு கோபத்தில் இருந்த குலாம்நபி ஆசாத்,  மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது.  அதனால் அந்த பொறுப்பை புதிய தலைமுறையினருக்கு கொடுத்துவிடுங்கள் என்று  சொல்லி விட்டு நழுவி விட்டாராம். 

 தலைமை மீது குலாம் நபிக்கு இருக்கும் கடும் கோபம் இன்னும் அப்படியே இருப்பதால் அவர் என்ன செய்யப்போகிறார்? என்ற சலசலப்பு கட்சியினரிடையே இருந்துவருகிறது.