×

கலால் வரி குறைப்பில் குற்றச்சாட்டு.. புள்ளிவிவரங்களால் எதிர்க்கட்சிகளை மவுனமாக்கிய நிர்மலா சீதாராமன்
 

 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு உண்மையில் பெரிய முயற்சி எடுக்கவில்லை என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அரசு சனிக்கிழமையன்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது என அறிவித்தது.  இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும். விலை குறைப்பின் மூலமாக மத்திய அரசுக்கு கலால் வரியின் மூலம் கிடைக்கக்கூடிய 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அடிப்படை கலால் வரியை குறைத்துள்ளதாகவும், இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்க உண்மையில் பெரிய முயற்சி எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். நிர்மலா சீதாராமன் நேற்று டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பிரதமர் அலுவலகம் நலனை உருவாக்குவதை பார்ப்பது நல்லது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க நேற்று முடிவு செய்யப்பட்டது. சில பயனுள்ள உண்மைகளை பகிர்கிறேன். விமர்சனம்/மதிப்பீடுகள் நம் முன் இருப்பதன் மூலம் பயனடையலாம் என்று நான் நம்புகிறேன்.

அடிப்படை கலால் வரி (பி.இ.டி.), சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்.ஏ.இ.டி.), சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் (ஆர்.ஐ.சி.) மற்றும் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (ஏ.ஐ.டி.சி.) ஆகியவை இணைந்ததுதான்  பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரியாக விதிக்கப்படுகிறது. இதில், அடிப்படை கலால் வரி வாயிலான வருவாய் மட்டும் மாநிலங்களுடன் மத்திய அரசு பகிரக்கூடியது. மற்ற எஸ்.ஏ.இ.டி., ஆர்.ஐ.சி. மற்றும் ஏ.ஐ.டி.சி. ஆகியவை வாயிலான வருவாய் மத்திய அரசுக்கு மட்டும்தான்.

பெட்ரோல் (லிட்டருக்கு ரூ.8) மற்றும் டீசல் (லிட்டருக்கு ரூ.6) மீதான கலால் வரி குறைப்பு (அமலுக்கு வந்துள்ள) முற்றிலும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ்ஸில் இருந்து செய்யப்பட்டுள்ளது. 2021 நவம்பர் 21ல் கூட, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.10 கலால் வரி குறைப்பு முற்றிலும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ்ஸில் இருந்து செய்யப்பட்டது. மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியில் கை வைக்கப்படவில்லை. எனவே இந்த இரண்டு வரி குறைப்புகளின் முழு சுமையும் (நவ.21 மற்றும் மே 21) மத்திய அரசே ஏற்கிறது. 

நேற்று செய்யப்பட்ட வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 21ல் செய்யப்பட்ட வரிக் குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வரி குறைப்புகளிலும் மத்தயி அரசுக்கு மொத்த வருவாய் தாக்கம் ஆண்டுக்கு ரூ.2.20 லட்சம் கோடியாகும். இந்திய பிரதமர் அலுவலகம் செய்த மொத்த வளர்ச்சி செலவினங்களை ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2014 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.90.9 லட்சம் கோடியை  வளர்ச்சி செலவினங்களில் செலவிட்டுள்ளது. அதேசமயம், 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான வரையிலான காலத்தில் (காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு) வளர்ச்சி செலவினங்களுக்காக ரூ.49.2 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய பிரதமர் அலுவலகம் செய்த செலவுகளில், உணவு, எரிபொருள் மற்றும் உரமானியங்களுக்கு இதுவரை செலவிடப்பட்ட ரூ.24.85 லட்சம் கோடியும், மூலதன உருவாக்கத்திற்கான ரூ.26.3 லட்சம் கோடியும் அடங்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு) 10 ஆண்டுகளில் மானியங்களுக்காக ரூ.13.9 லட்சம் கோடி செலவிடப்பட்டது என பதிவு செய்துள்ளார்.