×

ஓபிஎஸ்க்கும் இல்லை எடப்பாடிக்கும் இல்லை..  ஆட்சியர் கைக்கு போகுது

 

ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையேயான போட்டோ போட்டியால் தேவரின் தங்க கவசத்தை ஆட்சியர்களிடமே ஒப்படைத்து விட வங்கி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் .  தேவர் ஜெயந்திக்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளதால் வங்கி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தகவல்.

 கடந்த 2014 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அதிமுக சார்பில் வழங்கினார்.   இந்த தங்க கவசத்தை ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவிற்கும் அதிமுக பொருளாளர் மற்றும் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகிய இரண்டு பேரும் கையெழுத்து போட்டு மதுரை வங்கி லாக்கரிலிருந்து எடுத்துச் செல்வது,   பின்னர் விழா முதல் முடிந்ததும் பாதுகாப்பாக வங்கியில் ஒப்படைப்பது வழக்கம்.

 ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருந்ததால் தங்க கவசத்தை பெறுவதில் . ஓ பன்னீர் செல்வத்திற்கு, டிடிவி தினகரனுக்கும் இடையே போட்டோ போட்டு இருந்தது.   அந்த பிரச்சனையால் அதிமுக பொருளாளர் என்கிற முறையில் ஓபிஎஸ் உரிமை கோரி இருந்தார்.   ஆனால் இரு தரப்பினரும் முட்டி  மோதியதால்  யாருக்குமே இல்லை என்று சொல்லிவிட்டு ஆட்சியர்களிடம்  தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டது.   பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் எடுத்துச் செல்லப்பட்டு தேவரின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டது.

 இதை அடுத்து  2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரைக்கும் ஓபிஎஸ்,  வங்கியில்  பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைத்து வருகிறார்.   இந்த நிலையில் தற்போது மீண்டும் இதில் பிரச்சனை எழுந்திருக்கிறது.  இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது.  

 தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியும்,  ஓபிஎஸ் அணியும் மாறிமாறி வங்கிக்கும், தேவர் நினைவிட பொறுப்பாளருக்கும் கடிதம் அளித்து வருகின்றனர்.    பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளுக்கும் கடிதம் எழுதி வருகின்றனர்.  

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்,செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், காமராஜர்,  உதயகுமார் மேலும் தென் மாவட்டத்தைச்  சேர்ந்த எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு சென்று பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு சென்று காந்தி மீனாளை சந்தித்து அதிமுக  பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய கடிதத்தை கொடுத்தனர்.   தங்கக் கவசத்தை தங்களிடம்  கொடுக்க ஒப்புதல் கடிதத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.   ஆனால் அவர்களிடம் காந்தி மீனாள் எந்த உறுதியும் அளிக்கவில்லை.

 இதனால் முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.   காந்தி மீனாள் ஓபிஎஸ் அணிக்கு இபிஎஸ் அணியும் என்று எந்த அணிக்குமே ஒப்புதல் அளிக்க விரும்பவில்லை.   இதை  அடுத்து இந்த பிரச்சனையில்  இறுதி முடிக்கு முடிவு எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.  தேவர் ஜெயந்திக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் வங்கி அதிகாரிகள் தங்கள் எடுக்கப் போக முடிவு குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.   கடந்த 2017 ஆம் ஆண்டில் நடந்தது போலவே தற்போதும்  கடைபிடிக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல்.  தேவரின் தங்கி கவசத்தை ஆட்சியர்களிடம் ஒப்படைத்து விடலாம் என்று வங்கி முடிவு செய்து இருக்கிறது என்று தகவல்.