×

எப்போ எழவு விழுமோன்னு நான் காத்திருக்கல....டிடிவி தினகரன் சுளீர்
 

 

எப்படியும்  பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உறுதியாக இருக்கின்றது.   அதே மாதிரி  முதல்வர் வேட்பாள,ர் எதிர்க்கட்சி வேட்பாளர் என்று தொடர்ந்து விட்டுக்கொடுத்த தான் இந்த முறை விட்டுக் கொடுக்கக் கூடாது ஒற்றை தலைமைக்கு ஒத்து போய்விட்டால் தான் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்து பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று தீர்மானமாக இருக்கிறார்.  இதற்காக அவர் நீதிமன்றம் வரைக்கும் சென்று சட்டப் போராட்டம் நடத்தவும் தயாராகி விட்டா. ர் இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றால் அவர் கட்சிக்கு எதிரானவர்க என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

 இந்த அளவிற்கு ஓபிஎஸ் உறுதியாக இருப்பதால் ஒற்றைத்தலைமை தீர்மானத்தை இப்போதைக்கு  நிறுத்தி வைத்து விடுவோம் என்று கூட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆலோசித்து வருகிறது.  ஒருவேளை பொதுக்குழுவில் பெரும்பான்மை ஆதரவுடன் ஒற்றைத்தலைமை தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி விட்டால்  ஓபிஎஸ் சசிகலா, தினகரனை சந்திக்கக்கூடும் என்றும் எடப்பாடி தரப்பு கருதுகின்றனர்.

 அவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் சசிகலாவின் போட்டோவை  போட்டு போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

இந்த நிலையில்,  எடப்பாடி வென்றுவிட்டால் எடப்பாடிக்கு உங்கள் ஆதரவு உண்டா? என்று அமமுக பொதுச்செயாளர் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்க,  பன்னீர்செல்வம் என் நண்பர்.  அவர் இந்த அளவுக்கு வருத்தப்படக் கூடிய அளவுக்கு அங்கே ஏன் நிகழ்வுகள் நடக்கணும்.   அவரின் நண்பர் என்ற முறையில் தான் சொல்கிறேன் அரசியல் ரீதியாக செல்லவில்லை.

 அவர் வருத்தப்படக் கூடிய அளவுக்கு நிகழாமல் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கக் கூடிய அளவுக்கு நடக்க  வேண்டும்.  அதைத்தான் நான் விரும்புகிறேன்.  மற்றபடி இன்னொரு இடத்தில் எப்போது எழவு விழுமோ என்று காத்திருக்க கூடியவன் நான் கிடையாது என்றார்.

அவர் மேலும்,   யூகமாக இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது .  இப்போதைக்கு அங்கே எதுவும் நிகழவில்லை . ஒருவேளை முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தால் அப்போது பார்க்கலாம்.   எங்களை தேடி வரக்கூடிய அளவுக்கு ஓபிஎஸ் இல்லை.   அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் அப்போது பார்க்கலாம். இப்போதைக்கு நானாக எதையாவது சொன்னால் அது  அதிமுகவிற்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்திருக்கிறார்.