×

அதிமுகவிலிருந்து ரவீந்தரநாத் எம்பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை- ஓபிஎஸ்

 

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் 18 பேர் கூண்டோடு நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்சியினர் யாரும் நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது  அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் சிவ நாராயணசாமி எடப்பாடி அணியில் இருந்து இன்று  ஒ. பன்னீர் செல்வம் அவர்களை  சென்னை கிரீன் வேல்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் தன்னுடைய இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வ, “கட்சி சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. உண்மையான அதிமுக நாங்கள்தான் எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது. ஏதேட்சையான எடப்பாடி பழனிசாமி போக்கு எந்த வகையிலும் செல்லாது. அதிமுகவிலிருந்து ரவீந்தரநாத் எம்பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை” என தெரிவித்துள்ளார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம், “பொதுக்குழு உறுப்பினர்கள்  தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு வருவார்கள். யாரையும் நீக்க எடப்பாடிக்கு உரிமை இல்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். 11 தேதி நடந்தது பொதுக்குழு அல்ல.” எனக் கூறினார்.