எங்கள் ஆட்களே எதிர்க்கிறார்கள்; இம்சைகளை அனுபவிக்கிறேன் - மோடி கவலை
எங்கள் ஆட்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். பெரிய கஷ்டமாக இருக்கிறது. இந்த இடத்தில் அமர்ந்து இம்சைகளை அனுபவிக்கிறேன் என்று மோடி கவலை தெரிவித்திருக்கிறார் .
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருக்கிறார் முன்னாள் பிரதமர் தேவகவுடா. அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நிகழ்ந்துள்ளது.
பின்னர் டெல்லியில் சப்தர்ஜங் சாலையில் இருக்கும் தனது வீட்டில் இருந்தபோது அவர் மோடியுடனான சந்திப்பு குறித்து கூறியிருக்கிறார். காவிரி, கிருஷ்ணா, மகதாயி நதிநீர் விஷயங்களில் கர்நாடக மாநிலத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன்.
அதற்கு அவர், இந்த இடத்தில் அமர்ந்து இம்சைகளை அனுபவிக்கிறேன். நதி நீர் பிரச்சனையை தீர்ப்பது பெரும் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் ஆட்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி என்னிடம் கவலை தெரிவித்தார் என கூறி கூறியுள்ளார்.
அவர் மேலும், நீர் பாசன திட்டங்களில் அநீதி வேண்டாம். இந்த முதிய வயதிலும் நான் போராட்டம் செய்யும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். குஞ்சு இதிகா சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும்படியும் வலியுறுத்தினேன். ஹாசனில் இன்னும் விமான நிலைய பணிகள் துவங்கவில்லை என்பதையும் தெரிவித்தேன். எல்லாவற்றையும் பிரதமர் கேட்டுக்கொண்டார் . அவரிடம் இந்த கோரிக்கைகளை மனுவாகவும் அளித்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
எங்கள் ஆட்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இம்சைகளை அனுபவிக்கிறேன் என்று பிரதமர் மோடி தவலை தெரிவித்து இருப்பதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறி இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.