×

ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் உருவாகும் கொள்கைப் போராட்டம்

 

ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் கொள்கை போராட்டத்தை உருவாக்குகிறாரா ஆ. ராசா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  

மத்திய அரசு மாநில சுயாட்சியை தராவிட்டால் பெரியார் வழியில் தனித்தமிழ்நாடு கோருவோம் என்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சொன்னது,  அதுவும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் அப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . 

நாமக்கல் உள்ளாட்சி பிரதிகளின் மாநாட்டில் ஆ. ராசா அப்படி  பேசியதற்கு பதிலடியாக பாஜக சட்டமன்ற குழு துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்,   ’’தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும்படி நாங்களும் கூட கேட்போம்’ என்று சொல்ல,  விவகாரம் பெரிதானது.    கூட்டணியில் இருப்பதால் ஆராசாவின் பேச்சுக்கு காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை .  ஆனால் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு இரு கட்சிகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ‘’ திமுக தலைவர்களுக்கு அவ்வப்போது பிரிவினை மாத வலிப்பு வருவதை நாம் பார்த்திருக்கிறோம்’’ என்று துக்ளக் இதழ் கடுமையாக சாடியிருக்கிறது.   மேலும்,  ’’ சமீபத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆராசா நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.   எங்களை பெரியார் வழியில் தள்ளி விடாதீர்கள்.  தனிநாடு கேட்க விட்டு விடாதீர்கள்.   மாநில சுயாட்சி தாருங்கள் அதுவரை நாங்கள் ஓய மாட்டோம் என்று சொன்னதோடு முதலமைச்சர் முன் நான் அதை கூறுகிறேன் என்றும் பேசியிருக்கிறார். 

 ஏன் வேண்டுமென்றே ஸ்டாலின் முன் அதை கூறினார்.   சொன்னதை ஸ்டாலின் ஏற்றால் அண்ணாவை ஒதுக்கியதாக ஆகிவிடும்.   மறுத்தால் அவர் பெரியாரை ஒதுக்கியது போல் ஆகிவிடும்.  ஸ்டாலினுக்கு இப்படி ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஆ ராசா .  ஒரு வேளை ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் கொள்கை போராட்டத்தை உருவாக்குகிறாரா ஆ. ராசா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.