×

ஜே.டி.யு, பா.ஜ.க. இடையேயான மோதலின் சுமையை பீகார் மக்கள் சுமந்து வருகின்றனர்... பிரசாந்த் கிஷோர்
 

 

ஜே.டி.யு மற்றும் பா.ஜ.க. இடையேயான மோதலின் சுமையை பீகார் மக்கள் சுமந்து வருகின்றனர் என பிரசாந்த் கிஷோர்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள, அம்மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் வீட்டை அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். மேலும் பீகார் துணை முதல்வர் ரேணு தேவி வீடு மற்றும் பல பா.ஜ.க. அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் ஆளும் கூட்டணிக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் வீடு சேதப்படுத்தப்படுவது தடுக்கவில்லை என்றால், இது யாருக்கும் நல்லதல்ல என மறைமுகமாக முதல்வர் நிதிஷ் குமாருக்கு சஞ்சய் ஜெய்ஸ்வால் எச்சரிக்கை செய்து இருந்தார். இதனையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ராஜீவ் ரஞ்சன்,  இந்த திட்டத்துக்கு எதிராக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு படையினரின் செயலற்ற தன்மை குறித்து ஜெய்ஸ்வால் ஏன் பேசவில்லை? என கேள்வி கேட்டு இருந்தார்.

பீகாரில் ஆளும் கூட்டணிக்குள் நடக்கும் கருத்து மோதலை பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் இது தொடர்பாக டிவிட்டரில், அக்னிபாத் இயக்கம் இருக்க வேண்டும். வன்முறை மற்றும் நாசவேலை அல்ல. ஜே.டி.யு மற்றும் பா.ஜ.க. இடையேயான மோதலின் சுமையை பீகார் மக்கள் சுமந்து வருகின்றனர். பீகார் எரிகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் இந்த விஷயத்தை தீர்ப்பதற்கு பதிலாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் மும்முரமாக உள்ளனர் என பதிவு செய்துள்ளார்.